வைகை நதி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள
பெரியாறு பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே
பழனி குன்றுகளாலும் தெற்கே
வருசநாடு குன்றுகளாலும் அரண்
செய்யப்பட்டுள்ள
கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை
அடைந்ததும் தென் கிழக்காகத் திரும்பி மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.
வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ.
பாசனப்
பரப்பு 7031 ச.கி.மீ. பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற
காலங்களில் பொதுவாக வறண்டே
காணப்படும். இதன் வறட்சிக்கு காரணமாக வெள்ளி
மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும் அதிலிருந்து நீர்
மேற்காக கேரள எல்லையை நோக்கி
திருப்பப்பட்டு
பெரியாறு நீர் தேக்கத்தில் (தேக்கடி) தேக்கப் படுவதால் மழைக்காலங்கள் தவிர
பிற காலங்களில் தண்ணீர் வரத்து
வராதபடி செயற்கையாக வறட்சி
ஏற்படுத்தப்பட்டு
உள்ளது எனலாம்.
இவ்வாற்றுப் படுகை 9º 15’
மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’
மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும்
மதுரை, தேனி, திண்டுக்கல்,
சிவகங்கை, இராமநாதபுரம்
என மொத்தம் 7031 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி
அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள
அணைகளாகும்[1]
சுருளியாறு,
தேனியாறு,
வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு,
மருதநதி,
சிறுமலையாறு,
சாத்தையாறு முதலியவை வைகையின் துணை
ஆறுகளாகும்.
பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி கொடைக்கானல் மலையிலிருந்து வரும்
பாம்பாற்றுடன்(வெள்ளி அருவி
உள்ள ஆறு) இணைந்து தேனி
க்குக் கிழக்கே குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது.
பின்னர் முல்லையாராக பயணித்து, இவ்வாறு பயணிக்கும் பொழுது
சுருளியாறு
இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல்
நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு
பள்ளத்தாக்கிலிருந்து
உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து
வைகையாராக வைகை அணையைச் சென்று அடைகிறது.
மேலும் கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும் பெரியகுளம் வழியாக
சென்று வைகை அணை
முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும்.
1895ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு
ஒப்பந்தத்தின்படி,
கேரள, தமிழக எல்லையில் உற்பத்தியாகும் பெரியாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம்
(இந்த நீர் தேக்கம் ஆங்கில பொறியாளரான பென்னி குக் என்பவரால் தனது சொந்த பணத்தால் கட்டப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது) கட்டப்பட்டு ஒரு
பகுதி நீர் மேற்குத் தொடர்ச்சி மலையில்
உருவாக்கப்பட்டுள்ள
ஒரு குடைவின் மூலம்
வைகையில் திருப்பிவிடப்படுகிறது.
இதன் ஆரம்பம் கேரளா தமிழ்நாடு எல்லையில் உள்ள
தேக்கடி என்னும் பெரியாறு தேக்கத்தில் தேக்கப்படுகிறது. இது
கேரள தமிழ்நாடு எல்லையில் இருப்பதால் இரு
மாநிலங்களுக்கிடையே
முல்லைப் பெரியாறு
பிரச்சனைத் தொடர்கிறது. தேனி
மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள
நரசிங்கபுரத்தில்
வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த
அணையின் ஆழம்
21.64மீ (71அடி). மொத்த
கொள்ளளவு 6091 மில்லியன் கன
மீட்டர் (172 மில்லியன் கன
அடி). நிலக்கோட்டை அருகில் உள்ள
பேரணை, மதுரை
விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை
ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற
அணைகளாகும்.
தமிழ் இலக்கியத்தில் வெகுவாக வைகை
புகழப்பட்டுள்ளது."வையை என்னும் பொய்யாக் குலக்கொடி", "ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"
என்பன போன்ற தொடர்கள் நிலவுகின்றன.
இந்து சமயப் புராணங்கள் சிவபெருமானின் திருவிளையாடல்கள் வைகை
ஆற்றங்கரையில்
நிகழ்ந்ததாகக்
கூறும்.வடமொழி நூல்கள் வைகை
நதியை ""க்ருதமாலா" நதி என்று
குறிக்கின்றன.



No comments:
Post a Comment